இந்தியா

இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன் : இந்தியா கிளம்பும் முன் ட்ரம்ப் பேட்டி

webteam

இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாளை பகல் 12.30 மணிக்கு இந்தியாவுக்கு வருகிறார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் டொனால்டு ட்ரம்ப், நேரடியாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் ட்ரம்பை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து ட்ரம்ப்பும் மோடியும் சாலை‌ வழியாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடக்கும் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியாவிற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார். இந்தியா புறப்படும் முன் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ட்ரம்ப் பேசும்போது “இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய பிரதமர் மோடி எனது இனிய நண்பர். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என மோடி கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.