இந்தியா

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

webteam

109 மணி நேரத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட  குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை 2 வயது குழந்தையான பத்வீர் சிங் விளையாடிக்கொண்டு இருந்தான். அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக கால் வைத்த பத்வீர்  உள்ளே சிக்கினான். 

இது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மீட்புப்படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேலான மீட்புப்படை அதிகாரிகளும், ராணுவத்தினரும் குழந்தையை மீட்க போராடினர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 4 நாட்கள் போராட்டத்துக்கு பின் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை இன்று உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.