லாரி டிரைவர் ஒருவரை லாரி உரிமையாளர்கள் கட்டி தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
லாரி டிரைவரை தாக்கியதாக அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரே ஆகிய லாரி உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். விக்கி ஆகிலவ் என்பவர் தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். விக்கி எப்போதும் மதுபோதையில் இருப்பதாகவும், அதனால் அவர் பணியாற்றிய நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள் விக்கியை பிடித்து அலுவகத்தில் கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். அரைநிர்வாண கோலத்தில் விக்கி தாக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளது. இதனையடுத்து வீடியோ மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் லாரி உரிமையாளர்கள் அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரேவை கைது செய்துள்ளனர்