இந்தியா

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை

rajakannan

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அஜ்னலா பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் ஊடுருவ முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் ஊடுருவ முயன்றவர்களை சரணடையுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஒரு கிலோ எடை கொண்ட 4 ஹெராயின் பாக்கெட்டுகள், ஏகே-47 துப்பாக்கி, 9 எம்.எம். பிஸ்டல், பாகிஸ்தான் மொபைல் போன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.