திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக புரளிகளை பரப்பியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகியோர் இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் புரளிகளை பகிர்ந்ததாக திரிபுரா காவல்துறையினர் குற்றம் சாட்டி கைது செய்தனர். இந்த ஊடகவியலாளர்கள் சார்பில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், அவர்கள் இருவரும் இரு மதங்களுக்கிடையில் வெறுப்பை ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டிருந்தது. அவர்கள் இருவர் மீதும் திரிபுரா அரசு உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது. அதே நேரம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் இரண்டு பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்ட்டுள்ளது.