இந்தியா

குழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை

குழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை

Rasus

இடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஆனக்குழி எஸ்டேட் பகுதியில் குளத்தில் பள்ளிக் குழந்தைகள் மூழ்கி இறந்த சம்பவத்தில் தாய் மீது சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஆனக்குழி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அனிஷ்- இசக்கியம்மா தம்பதியரின் மகன் அபிஜித்(8),  மகள் லஷ்மிப்ரியா (6). இவர்கள் இருவரும் டைமூக் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன இருவரும் வீட்டருகே இருந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். உடற்கூறு பரிசோதனைக்குப்பின், குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்த நிலையில் குழந்தைகளுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.

இந்நிலையில் குழந்தைகள் இறப்பில் தாய் இசக்கியம்மா மீது சந்தேகம் இருப்பதாக தந்தை அனீஷ் குமுளி போலீசில் புகார் செய்துள்ளார். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக பிரிந்து வாழும் சூழலில், குழந்தைகள் இருவரும் தாயிடம் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தாயின் மீது பிரிந்து வாழும் தந்தை கொடுத்த சந்தேக புகாரின் பேரில், இசக்கியம்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.