இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருவர் கொலை : காங். மீது குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருவர் கொலை : காங். மீது குற்றச்சாட்டு

webteam

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளது.

கேரள மாநிலம் வெம்பாயம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மிதிலாஜ் (32) மற்றும் முகமத் (25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ளனர். இந்நிலையில் நேற்றும் திருவனந்தபுரத்தின் வெஞரமூடு பகுதியில் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த கும்பல், அவர்களை அடித்துக்கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இந்த கொலை சம்பவத்திற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எஸ்.பி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், இதில் காங்கிரஸார் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கொலைக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக சிபிஎம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.