இந்தியா

மேற்குவங்கத்தில் 2 கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை

மேற்குவங்கத்தில் 2 கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை

கலிலுல்லா

மேற்குவங்கத்தில் திரிணாமூல் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அனுபம் தத்தா என்ற திரிணாமூல் காங்கிரஸ் கவுன்சிலர், கொல்கத்தா புறநகர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த அவரை அங்கிருந்த நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதேபோன்று புருலியா அருகே நடைபயிற்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலரான தபன் காண்டுவையும் அடையாள தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதால் மேற்குவங்க மாநிலத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.