இந்தியா

பாக்.ராணுவம் அத்துமீறல்: 2 இந்திய வீரர்கள் பலி

பாக்.ராணுவம் அத்துமீறல்: 2 இந்திய வீரர்கள் பலி

webteam

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலியாயினர்.

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் அப்பாவிமக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பர்க்வால் செக்டாரில் உள்ள ஆக்னூர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.