கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தங்குவதற்கு இடம், உணவு அளித்ததுடன் ஆயுதங்கள் வாங்கவும் உதவியதாக பர்வாயிஸ் அகமது ஜோத்தர் மற்றறும் பஷீர் அகமது ஜோத்தர் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
பஹல்காமில் தாங்கள் புகலிடம் அளித்த 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் என்றும் அவர்கள் இருவரும் தெரிவித்ததாக என்ஐஏ கூறியுள்ளது. கைதான இருவரும் தெரிந்தேதான் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளனர் என்றும் என்ஐஏ கூறியுள்ளது.
இவர்கள் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் என்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்துள்ள நிலையில் அதைக்கொண்டு என்ஐஏ மேலும் விசாரணை நடத்திவருகிறது.