இந்தியா

கால் ரெக்கார்டில் வந்த பேல்பூரி : வைரல் ட்வீட் பின்னணியில் ’சாட்’ history!

JananiGovindhan

உணவு மற்றும் மளிகை பொருட்களை மடித்து தரப்படும் செய்தித் தாள் உள்ளிட்ட பேப்பர்களை படித்து பார்க்கும் வழக்கம் அனைவருக்குமே இருக்கக் கூடிய ஒன்று. அதில் சில சுவாரயஸ்மானதாக இருந்திருக்கும்.

இப்படி இருக்கையில், ட்விட்டர் பயனர் ஒருவர் பேல்பூரி சாப்பிட்டுவிட்டு அந்த பிரித்து பார்த்தபோது அதில் சந்தீப் ரேன் என்ற நபர் ஒருவரின் post paid செல்போன் பில் குறித்த விவரங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.

ட்விட்டர் பதிவை காண: இதை க்ளிக் செய்யவும்

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ரேர்னா லித்தோ என்பவர், “தனிநபர் ஒருவரின் தரவுகள் பாதுகாக்கப்படுவது என்பதே நாட்டில் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. இப்போதுதான் மிஸ்டர் ரேனின் செல்போன் ரெக்கார்ட்ஸ் கொண்ட பேப்பரில் பேல்பூரியை சாப்பிட்டேன்” எனக் குறிப்பிட்டு அந்த கால் ரெக்கார்ட் பேப்பரில் இருந்த செல்போன் எண்களை மறைத்து போட்டோவும் பகிர்ந்திருக்கிறார்.

கடந்த வெள்ளியன்று (ஜூன் 3) பதிவிடப்பட்ட அந்த ட்வீட்டை ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்திருக்கிறார்கள். அந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் தனிநபரின் தகவல்கள் தவறாக பயன்படுத்தக்கூடிய வகையில் இத்தனை கவனக்குறைவாக கையாளப்பட்டிருக்கிறது என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.