புத்தாண்டு பரிசாக தன் ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டுமென கேட்ட நபரின் கணக்கை பிரதமர் மோடி பின் தொடர்ந்தார்
ட்விட்டரில் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்சை கொண்ட பிரதமர் மோடி, 2381 பேரை ஃபாலோ செய்து வருகிறார். முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்களை ஃபாலோ செய்யும் பிரதமர் மோடி சில சாமானியர்களையும் ஃபாலோ செய்கிறார். அதன்படி நேற்று பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்த அங்கிட் துபே என்ற இளைஞர்,
''மதிப்பிற்குரிய பிரதமரே, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன். அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவுசெய்து பின் தொடர வேண்டும்'' என பதிவிட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ''செய்துவிட்டேன். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
மோடியின் பதிலால் மகிழ்ச்சியடைந்த அங்கிட், ''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி ட்விட்டரில் என்னை பின் தொடர்வது இந்த புத்தாண்டின் சிறந்த பரிசு. பிரதமர் மோடிக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.