இந்தியா

ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்!

webteam

இந்தி தொடர்பான அமித்ஷாவின் கருத்தை தொடர்ந்து, ''தமிழ்வாழ்க'' என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இன்று இந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். 

அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பு தொடர்பாக பல்வேறு வாதங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #தமிழ்வாழ்க என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் #StopHindiImposition, StopHindiImperialism ஆகிய ஹெஸ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகியுள்ளன. இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகளை இணையவாசிகள் பலரும் இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.