2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வருகின்றனர். ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் 328 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல், பல்வேறு பொருட்களின் வரி விதிப்பு விகிதமும் குறைக்கப்பட்டது.
நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாஷிங் மிஷன், குளிர்சாதனப் பெட்டிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 பொருட்களின் ஜிஎஸ்டி வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
குறைக்கப்பட்ட பொருட்கள்:-
குளிர்சாதன பெட்டி
வாஷிங் மிஷின்
வக்கியூம் கிளினர்
பெயிண்ட்
வாட்டர் கீட்டர்
கிரைண்டர்
மிக்ஸர்
தொலைக்காட்சிப் பெட்டி (27 இன்ச் வரை)
மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதமாக உள்ளது.
ஹேண்ட் பேக்
ஜுவல்லரி பாக்ஸ்
அலங்கார கண்ணாடிகள்
கை விளக்குகள்.., உள்ளிட்ட பொருட்கள் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.