இந்தியாவில் மரபணு மாற்ற பருத்திக்கு அனுமதி தந்தவர் என்ற முறையில் அதற்காக வேதனைப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பேசினார். மரபணு மாற்ற பருத்தியின் வருகை பல ஆயிரம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்றும் இதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.