இந்தியா

ஐ.நா.மொழிகளில் ஹிந்தியை சேர்க்க முயற்சி: சுஷ்மா சுவராஜ் பேச்சு

ஐ.நா.மொழிகளில் ஹிந்தியை சேர்க்க முயற்சி: சுஷ்மா சுவராஜ் பேச்சு

webteam

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஹிந்தியைக் கொண்டுவர இந்திய அரசு தொடர்ந்து முயற்சியை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார்.

இதுக்குறித்து மக்களவையில் பேசிய அவர், ஹிந்தி மொழியை உலகமெங்கும் பிரபலப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஹிந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் மத்திய அரசு தொடர் முயற்சியை எடுத்து வருவதாக தெரிவித்தார்.ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க ஐ.நா.சபை ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும், அதன்படி ஹிந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ள வைக்க ஐ.நா. பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் என்றார். எனவே இதற்கான கூடுதல் செலவை இதர உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென விதிகள் இருப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஹிந்தியை கொண்டுவர ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் சுஷ்மா சுவராஜுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.