2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வருகை தந்தனர்.
அகமதாபாத் விமானநிலையத்திற்கு தனி விமானத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். ட்ரம்ப் மனைவி மெலனியாவுக்கு வணக்கம் தெரிவித்து மோடி வரவேற்றார்.
பின்னர், இந்திய அதிகாரிகளை ட்ரம்புக்கு அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி, ட்ரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கார்வரை சென்று ட்ரம்ப்பை சபர்மதி ஆசிரமத்திற்கு மோடி வழியனுப்பி வைத்தார்.
சபர்மதி புறப்பட்ட ட்ரம்புக்கு மக்கள் கையசைத்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆசிரமத்தையடுத்து விரிவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்திற்கு ட்ரம்ப் செல்கிறார்.