இந்தியா

சுஷ்மா ஸ்வராஜூடன் ட்ரம்ப் மகள் சந்திப்பு

webteam

ஐ.நா. பொதுக் கூட்டத்துக்கு இடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா, அமெரிக்கா இடையே மகளிர் தொழில்முனைவோர் மற்றும் பணி ஆற்றலை மேம்படுத்துவது தொடர்பாக அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார். சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தொடங்குவதையொட்டி சுஷ்மாவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் இவான்கா குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஷ்மா ஸ்வராஜ் அனைவரையும் ஈர்க்கக் கூடிய வெளியுறவு அமைச்சர் என இவான்கா பாராட்டியுள்ளார். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வரும் நவம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்கவுள்ளனர்.