இந்தியா

சபரிமலையில் பெண் பக்தர்களுக்கு தனி வரிசை அமைப்பதில் சிக்கல்

webteam

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியளிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று ஆலோசனை நடத்தியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் உண்மையான பக்தர்கள் வரமாட்டார்கள் என்றும் பெண்ணியவாதிகள் மட்டுமே வர நினைப்பார்கள் எனவும் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசித்ததாக பத்மகுமார் தெரிவித்துள்ளார். வரும் நவம்பரில் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்க உள்ள நிலையில், தேவசம் போர்டுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என முதல்வர் உறுதியளியத்துள்ளதாக பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண் பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, கழிவறைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், அவர்கள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்வதில் சிக்க‌ல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரிக்கை வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பத்மகுமார் கூறியுள்ளார்.