இந்தியா

கோவா காங்கிரஸில் புதிய சிக்கல்- சோனியா காந்தி எடுத்த அதிரடி முடிவு

ச. முத்துகிருஷ்ணன்

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் திடீரென தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும் நிலையில், பிரச்னையை சமாளிக்க முகுல் வாஸ்னிக்கை கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் திகாம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக நேற்று தகவல் பரவியது.

இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் அந்த எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்துப் பேச முகுல் வாஸ்னிக்சை கோவாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ளதாக ட்விட்டரில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.