இந்தியா

திரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்

திரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்

Rasus

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தலையை துண்டிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மிரட்டல் ஃபேஸ்புக் பதிவு போட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திரிபுராவை சேர்ந்த சுப்ரதா சக்ரவர்த்தி என்பவர், தனது வழக்கமான ஃபேஸ்புக் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது, ரியோ ராய் என்பவரின் பதிவில், திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் தலையை துண்டிப்பவர்களுக்கு தக்க சன்மானமாக ரூ.5.5 லட்சம் வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சுப்ரதா சக்ரவர்த்தி வெஸ்ட் அகர்தலாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையில், அது போலி பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் அக்கவுண்ட் என்பது தெரியவந்தது. இதனிடையே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.