தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் வருகை புரிந்தார். ரங்கா ரங்கா கோபுரத்தில் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் கொடுத்து, நம்பெருமாள் உற்சவர், தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம்
தாயார் சன்னதியில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் " ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2-வது முறையாக வந்திருக்கேன், ஸ்ரீரங்கம் கோவில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு நன்றி. நாளை சென்னையில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன் அப்போது அரசியல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகிறேன் என்றார். முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அர்ச்சகர்கள் உடனிந்தனர்.