இந்தியா

ட்ரெண்டில் மல்லையா? : வைரலாகும் மீம்ஸ்கள்

ட்ரெண்டில் மல்லையா? : வைரலாகும் மீம்ஸ்கள்

webteam

பெயரை சொல்லும் போதே … 9000 ஆயிரம் கோடி வங்கி மோசடிதான் அனைவரின் நினைவுக்கும் வரும். 2016 ஆம் ஆண்டு, அவர் லண்டன் தப்பிச் சென்ற போது தேசிய ஊடங்கங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை அவர் பற்றிய செய்திகளும் விவாதங்களும் அனல் பறந்தன. இன்றளவும் மல்லையா பற்றி செய்தி வரும் போது பலரும் அதனை கவனிக்க தவறியதில்லை.  

மல்லையா கடன் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் என்ற புகார் பட்டியலில் ஒவ்வொரு வங்கியும் இணைந்து கொண்டன. உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம்,  சிபிஐ, அமலாக்கத்துறை என அவர் மோசடிகள் குறித்த விசாரனைகள் ஒரு புறம், அவரை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் மறுபுறம் என  அவரை சுற்றிச்சுற்றி அனைத்து விஷயங்களும் நடந்து கொண்டிருக்க… அவர் லண்டனை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். லண்டனில் மல்லையா கைது செய்யப்பட்டார் என்ற செய்தி சென்று சேர்வதற்குள்ளாகவே அவர் ஜாமீன் பெற்றார் என்ற செய்தி வந்தது.

சில ஆயிரங்கள் வங்கியில் கடன் வாங்கிவிட்டு  கடனை திரும்ப செலுத்த முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்  நிகழ்வுகளை பார்க்கும் போதும் அது குறித்த செய்திகளை படிக்கும் போதும்  மல்லையாவின் மோசடிகள் குறித்து நினைக்க தவறுவதில்லை.
லண்டனில் உள்ள மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது என்று ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூறி வந்த நிலையில், அவர் லண்டனில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்  பார்க்க மைதானத்தில் ரசிகர்களோடு அமர்ந்திருந்த புகைப்படம் வைரலாகியது. அதே போல லண்டனில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதும் பேசு பொருள் ஆனது. அவரை வழக்குகள் சூழ்ந்து கொண்டிருக்க… மல்லையா மூன்றாவது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற செய்தியும் மல்லையா உண்மையிலேயே “தேடப்படும் குற்றவாளி” தானா என்ற கேள்வியை எழுப்பியது .

இந்த நிலையில் மல்லையா தன் ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளளார். அதில் , “பொதுதுறை வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த  முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அதில் தலையீடு இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் இந்தியா திரும்ப விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளளார் மல்லையா. 

மல்லையா ஏமாற்றும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்…அவருடைய இந்த அறிவிப்பை எந்த அளவிற்கு நம்புவது ?.. இதுவும் வெற்று அறிக்கை தானே! திடீரென்று இவர் எப்படி நல்லவர் ஆனர்!! என்பன போன்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அதே சமயம் மல்லலையாவின் அறிவிப்பை கேலி செய்து சில மீம்ஸ்களும் வலம் வர தொடங்கியுள்ளன அவற்றில் சில: