மரணத்தை நோக்கி செல்லும் பென்குயினின் டிரெண்டிங் வீடியோ web
இந்தியா

மரணத்தை நோக்கி சென்ற பென்குயின்.. Trend விடீயோவின் பின்னணி என்ன? மனிதர்கள் இதனை கொண்டாடுவது ஏன்?

அண்டார்டிகாவில் தனியே மரணத்தை நோக்கி செல்லும் பென்குயினின் வீடியோ இணையத்தில் பரவிவரும் நிலையில், அது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த வீடியோ ஏன் பரவுகிறது ? அதனை பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

PT WEB

2007-ம் ஆண்டு வெளியான ஆவணப்படத்தில், பென்குயின் ஒன்று தனது கூட்டத்திலிருந்து விலகி, உணவில்லா அண்டார்டிகா மலைப்பகுதிக்கு சென்ற காட்சி இணையத்தில் வைரலானது. இது மனிதர்களின் தனிமையை பிரதிபலிக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் பகிர்ந்த AI படம் இதை மீண்டும் பிரபலமாக்கியது.

கடந்த 2007-ம் ஆண்டு வெர்னர் ஹெர்சோக் என்பவரின் Encounters at the End of the World என்ற ஆவணப்படம் வெளியானது. அவர் தனது அண்டார்டிகா பயணத்தையும், அங்கு அவர் சந்தித்த அனுபவங்களையும் இந்த படத்தில் காட்டியிருந்தார்.

இதில் ஒரு காட்சியில் பென்குவின் ஒன்று தனது கூட்டத்திலிருந்து விலகி, அண்டார்டிகாவில் உணவே கிடைக்காத உற்பகுதியை நோக்கி செல்லும் காட்சிகள் இடம்பிடித்திருந்தது. பென்குவினின் உணவுகள் கடற்கரை பகுதியில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இந்த குறிப்பிட்ட பென்குவின் அண்டார்டிகாவில் மலைப்பகுதிகளை நோக்கி செல்வது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் காரணமாக அந்த பென்குவின் தனது மரணத்தை நோக்கி செல்கிறது என்று கருத்துக்கள் எழுந்தன. இந்த சூழலில் சமிபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு AI படத்தை பகிர்ந்து அந்த பெங்குவின் அமெரிக்க கொடியை ஏந்தியிருக்க, டிரம்ப்பின் கையை பிடித்து கிரீன்லாந்து என்ற கொடி இருந்த இடம் நோக்கி செல்வதாக அதில் காட்சி இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக இந்த பென்குயின் மீண்டும் இணையத்தில் வைரலானது. கிரீன்லாந்தில் பென்குயின்கள் வசிக்காத நிலையில், டிரம்ப்பின் இந்த செயல் விமர்சிக்கப்பட்டது. அதே நேரம் 2007-ம் ஆண்டு வெளியான அந்த பென்குயினின் வீடியோ மீண்டும் பரவி வருகிறது.

மனிதர்கள் கொண்டாடுவது ஏன்..?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோதத்துவ நிபுணர்கள், தற்போது வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் தனிமையை விரும்புவதால் கூட்டத்தை விட்டு தனியே செல்லும் பென்குயினை தங்களில் ஒருவராக உணர்ந்து அந்த விடியோவை பகிர்வதாக கூறியுள்ளனர்.

பென்குயினின் இந்த அசாதாரண நடவடிக்கை குறித்து பேசியுள்ள ஆய்வாளர்கள், நோய், காயம் அல்லது உடலியல் சிக்கல்கள் காரணமாக குழப்பமடையும் பெங்குவின்கள் இதுபோல திசைமாறி செல்வதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அவை சில நேரங்களில் நிலத்தின் உற்பகுதி நோக்கி செல்கின்றன என்றும், அங்கு உணவு உள்ளிட்டவை கிடைக்காததால், அவை அங்கே இறந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.