இந்தியா

“நல்ல ரோடு வேண்டுமா? சுங்கக்கட்டணம் கட்டுங்க” - நிதின் கட்காரி

webteam

நல்ல சாலை வேண்டுமென்றால், மக்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி, “சுங்கச்சாவடிகள் எப்போதும் போகாது. அவை அங்கேயே தான் இருக்கும். உங்களுக்கு தரமான சாலை சேவை வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை அவற்றை குறைத்து, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் 2017ஆம் ஆண்டு மட்டும் 4.60 லட்சம் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.46 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மகாராட்ஷ்ராவில் ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சி போன்ற சில எதிர்க்கட்சியினர் மற்றும் சில அமைப்புகள் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன” என்று கூறினார்.