இந்தியா

திருநங்கையை மணந்த எம்பிஏ பட்டதாரி..!

திருநங்கையை மணந்த எம்பிஏ பட்டதாரி..!

webteam

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் எம்பிஏ பட்டதாரி ஒருவர், திருநங்கையை திருமணம் செய்துள்ளார்.

துபாயில் பணியாற்றும் எம்பிஏ பட்டதாரி பாசுதேவ் நாயக் என்பவர், புவனேஷ்வரைச் சேர்ந்த திருநங்கை மேகனா கின்னரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தங்களுடைய சக தோழிக்கு திருமணம் நடந்ததை திருநங்கைகள் வெகு விமர்சையாக ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மணமகன் பாசுதேவ் நாயக்கிற்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.