இந்தியா

3 ஆண்டுக்கு ஒருமுறை வங்கி அதிகாரிகளை இடமாற்றம்?

3 ஆண்டுக்கு ஒருமுறை வங்கி அதிகாரிகளை இடமாற்றம்?

webteam

3ஆண்டுகள் ஒரே கிளையில் பணியாற்றிய வங்கி உயரதிகாரிகளை இடமாற்றம் செய்யு‌‌ம்படி ம‌த்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்‌கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் இந்திய அளவில் பூதாகரமாகியுள்ள நிலையில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.இந்நிலையில் 3ஆண்டுகள் ஒரே கிளையில் பணியாற்றிய வங்கி உயரதிகாரிகளை இடமாற்றம் செய்யு‌‌ம்படி ம‌த்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்‌கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு இறுதியுடன் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கணக்காளர் உள்ளிட்ட அலுவ‌லர்களையும் உடனடியாக பணிமாற்றம் செய்ய அ‌றிவுறுத்‌தியுள்‌ளது. மத்‌திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்தும் நடைமுறைகளை தொடங்கி இருப்பதாக பாங்‌க் ஆப் பரோடா கூறியுள்ளது.