காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் சுட்டு கொல்லப்படுகின்றனர் எனவும் கற்களால் தாக்குவதாகவும் கூறி பிரிவினைவாத அமைப்புகள் நேற்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என போலீஸ் துறை கூறியதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது.