இந்தியா

ரயில்கள் தாமதமானால் பதவி உயர்வுக்கு ஆபத்து

ரயில்கள் தாமதமானால் பதவி உயர்வுக்கு ஆபத்து

Rasus

ரயில் சேவையில் கால தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வும் தாமதமாகும் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2017-2018 ஆம் ஆண்டில் 30 சதவிகித ரயில்கள் உரிய நேரத்திற்கு இயக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ‌ரயில் சேவையில் கால தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வும் தாமதமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி கால தாமதத்தை நியாயப்படுத்த கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒரு மாத காலத்திற்குள் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக த‌கவல் வெளியாகியுள்ளது.