Model image google gemeni
இந்தியா

ஒரு மாதத்துக்கு டேட்டா இல்லாத கட்டணம்.. பயனர்களுக்கு லாபம்.. TRAI அதிரடி உத்தரவு!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மொபைல் பயனர்களுக்கு சாதகமான பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Prakash J

டெலிகிராம் நிறுவனங்கள் பயனர்களுக்கு 4G மற்றும் 5G உள்ளிட்ட இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகின்றன. அதேநேரத்தில் டேட்டா தேவையில்லாத, குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் டெலிகிராம் வகுத்த டேட்டா பேக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குக் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (TRAI) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, TRAI புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, குறுகிய கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என அது உத்தரவிட்டுள்ளது.

Trai
  • தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான கால அளவு கொண்ட அனைத்து வழக்கமான டேட்டா திட்டங்களுக்கும் இணையாக, இணையச் சேவை (Data) இல்லாத வெறும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (Voice & SMS only) திட்டங்களை கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும்.

  • டேட்டா நீக்கப்படுவதால், அத்திட்டங்களின் கட்டணம் அதற்கு ஏற்றவாறு கணிசமாகக் குறைக்கப்பட்டு, குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.

  • பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரே தேதியில் (எ.கா: மாதத்தின் 5-ஆம் தேதி) ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதி வழங்கப்பட வேண்டும்.

  • பிப்ரவரி போன்ற குறிப்பிட்ட தேதி இல்லாத மாதங்களில், அந்த மாதத்தின் இறுதி நாளில் திட்டம் புதுப்பிக்கப்படும்.

  • தற்போதுள்ள 28 நாட்கள் வரம்பிற்குப் பதிலாக, பூரண 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்க வேண்டும். இதன்மூலம் பயனாளர்கள் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக 12 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானது.

Model Image
  • குறுகிய கால திட்டங்கள் மட்டுமின்றி, நீண்டகாலச் செல்லுபடி (Longer Validity) கொண்ட திட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு டேட்டா சாரா (Voice + SMS) திட்டமாவது சேர்க்கப்பட வேண்டும்.

இத்திட்டங்களை, அக்டோபர் 21, 2026-க்குள் தங்களின் ரீசார்ஜ் பட்டியலில் சேர்க்க டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதன்மூலம், பட்டன் போன் பயன்படுத்துவோர், முதியவர்கள், குறைந்த வருவாய் பிரிவினர், இரண்டாவது சிம் கார்டை அழைப்புகளுக்கு மட்டும் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.