இந்தியா

இணையசேவை வேகத்தை கணக்கிடும் செயலிகளை ஆய்வு செய்யும் டிராய்

இணையசேவை வேகத்தை கணக்கிடும் செயலிகளை ஆய்வு செய்யும் டிராய்

webteam

இணையதள சேவையின் வேகத்தை கணக்கிடும் செயலிகளின் செயல்பாடுகளை டிராய் ஆய்வு செய்ய உள்ளது.

தொலைபேசி நிறுவனங்களின் இணையசேவை வேகத்தை கணக்கிடும் செயலிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் திட்டமிட்டுள்ளது. 

இந்த செயலிகள் தரவிறக்கம் மற்றும் தரவேற்ற வேகத்தை கணக்கிடும் முறை குறித்து விளக்கமளிக்கும்படி அந்த நிறுவனங்களை டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் வேகத்தை கணக்கிடும் முறையில் உள்ள குழப்பத்தை தீர்க்க டிராய் திட்டமிட்டுள்ளது.