இந்தியா

யமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை

webteam

யமுனா நதி அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால் லோஹா புல் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்திலிருந்து ஹத்னி குண்ட் தடுப்பணையிலிருந்து 8 லட்சம் கன அடி நீர் டெல்லியுள்ள யமுனா நதியை நோக்கி திறந்துவிடப்பட்டது. இந்த நீரின் வரத்தால் யமுனா நதி ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யமுனா நதியில் நீரின் அளவு 205.33 மீட்டரை தாண்டும் பட்சத்தில் அது மிகவும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும். 

இந்நிலையில் தற்போது யமுனா நதியிலுள்ள நீரின் அளவு 205 மீட்டரை எட்டியுள்ளது. ஆகவே யமுனா நதி அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யமுனா நதியின் மீது இருக்கும் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல லோஹா புல் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யமுனா நதி பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் இதற்கான மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.