மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வந்த விவாசாயிகள் இன்று டெல்லியில் ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி விவசாயிகள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்கும் வண்ணம் டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். அதன் காரணமாக டெல்லி கலவர பூமியாக காட்சியளித்தது.