ராஜஸ்தானில் நேற்று இரவு டிராக்டர் ஒன்று வீட்டினுள் நுழைந்ததால் 3 குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜலவார் பகுதியில், நேற்று இரவு ஓட்டுநர் ஒருவர் மது அருந்திவிட்டு டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த டிராக்டர் ஜலவார் குடியிருப்பில் நுழைந்தது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் டிராக்டர் மிதித்து உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இடுக்கில் இருந்து மீட்டு எடுக்கப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியதால்தான் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஜலவார் காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்து விபத்து குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். டிராக்டர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஜலவார் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.