மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது.
169 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 பேர் சிவசேனா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.