இந்தியா

“மே 10 முதல் கர்நாடகாவில் முழு முடக்கம்” - எடியூரப்பா

“மே 10 முதல் கர்நாடகாவில் முழு முடக்கம்” - எடியூரப்பா

jagadeesh

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பலனளிக்காததால் தற்காலிகமாக முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.