154 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து, உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா, 28.2% பங்குடன் சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. சீனா 146.3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து 26.8% பங்குடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா 154 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் உற்பத்தியாகும் அரிசியில் இந்தியாவின் பங்கு மட்டும் 28.2% ஆகும். சீனா 146.3 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இதன் பங்கு 26.8% ஆகும். வங்கதேசம் 37.7 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து 6.9% பங்குடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
33.8 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி, 6.2% பங்களிப்புடன் இந்தோனேசியா 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. கிழக்காசிய நாடான வியட்நாம் 26.2 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி, 4.8% பங்களிப்புடன் 5ஆம் இடத்தில் உள்ளது. 3.8% பங்களிப்புடன் 6ஆம் இடத்தில் உள்ள தாய்லாந்து 20.7 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 12.4 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளது. இந்நாடு 2.3% பங்களிப்புடன் 7ஆவது இடத்தை பெற்றுள்ளது.
மியான்மர் 12 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து 8ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 10 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து 9ஆவது இடத்திலும் உள்ளன. 8.1 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி, 1.5% பங்களிப்புடன் கம்போடியா 10ஆவது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் 15.5% பங்களிப்பை வழங்குகின்றன