சென்னை வந்த பிரதமரை தனியே சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் இரு தலைவர்களும் அரசியல் பேசியதாகத் தகவல்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்திற்கும் அடிக்கல். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ சேவை தொடக்கம்
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் டாங்கி நாட்டிற்கு அர்ப்பணிப்பு. வாகனங்களை தொடர்ந்து போர் ஊர்தி தயாரிப்பிலும் தமிழ்நாடு முன்னிலை பெறும் என பிரதமர் உறுதி.
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, எழுவர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி முதல்வர் கேட்டாரா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம். கால அவகாசம் இனியும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டம்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கருத்துருவை உருவாக்கியதாக புகார். பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது பெண் சூழலியல் செயற்பாட்டாளர் கைது.
புல்வாமா நினைவுதினத்தன்று காஷ்மீரில் நடைபெறவிருந்த மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு. கைதானவரிடமிருந்து 6 கிலோ வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல்.
இங்கிலாந்துக்கு எதிரான சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம். 3 நாட்கள் மீதமுள்ள நிலையில் 249 ரன்கள் முன்னிலை.