இந்தியா

TopNews | குரூப் 4 கலந்தாய்வு... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | குரூப் 4 கலந்தாய்வு... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

webteam

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் கலந்தாய்வு. புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது. முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு. தங்களுக்கும் பரவும் முன் தங்களை மீட்க 6 தமிழர்கள் கோரிக்கை

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 147 ரூபாய் உயர்வு. 6 மாதங்களில் 290 ரூபாய் வரை அதிகரிப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என உயர்நீதிமன்றத்தில் பதில். நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா என விளக்கமளிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவு

சிறந்த நிர்வாகத்தால் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது சாத்தியம். பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

ஆம் ஆத்மி சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். 16 ஆம் தேதி நடைபெறும் விழாவில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம். அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிப்பு -பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் வசூல் விவகாரம்: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை சரமாரி கேள்வி.

செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இருவருக்கு தூக்கு. நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சில்லறை விலை பணவீக்கம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.59% உயர்வு. தொழிற்சாலை உற்பத்தி மைனஸ் 0.3% சரிவு.