இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

webteam

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக நாளை அதிகாலை சந்திரயான்-2 ஏவப்படுகிறது. இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

கர்தார்பூர் வழித்தடம் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய ஆலோசனை.

பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி எழுதிய ராஜினாமா கடிதத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழக மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதாக மு.க.ஸ்டாலின் பெருமிதம். வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்குங்கள் என தொண்டர்களுக்கு மடல்

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக எழுந்த புகாரில், நாகையைச் சேர்ந்த இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து இடையே இறுதிப் போட்டி.முதன்முறையாக கோப்பையை வெல்ல இரு அணிகளும் முனைப்பு