ரயில் நிலையம் முகநூல்
இந்தியா

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையம் எது? ஆய்வு சொல்லும் தகவல் !

இது குறித்தான தகவலை இங்கு பார்க்கலாம்.

PT WEB

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக புதுடெல்லி ரயில் நிலையம் இருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் புதுடெல்லி ரயில் நிலையம் 3 ஆயிரத்து 337 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதேசமயம், அதே ஆண்டில் 3 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 272 பயணிகளை கையாண்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக ஆயிரத்து 692 கோடி வருவாய் ஈட்டி, மேற்குவங்க மாநிலம் ஹவுரா ரயில்வே நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாவது இடத்தையும், நான்காவது இடத்தில் ஆந்திரா விஜயாவாடா ரயில் நிலையமும் உள்ளன.