இந்தியா

மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்

webteam

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள். 

  1. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம் 
  2. வருமான நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு
  3. 2 ஹெக்டர் வரை உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்
  4. மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும்
  5. மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்படும்
  6. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதும்.     
  7. ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு
  8. பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு
  9. பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்வு
  10. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை மார்ச் மாதத்திற்குள் உருவாகும்