Headlines facebook
இந்தியா

Headlines | இபிஎஸ் மீது விமர்சனம் வைத்த முதலமைச்சர் To எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜூன் போட்ட பதிவு!

இன்றைய காலை தலைப்பு செய்தியானது, இபிஎஸ் மீது விமர்சனம் வைத்த முதலமைச்சர் முதல் எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜூன் போட்ட பதிவு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு.

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி எனவும், பூசணிக்காயை கட்டுச் சோற்றில் மறைக்கவே முடியாது என்று விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடுவதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம். கனிமவள சட்டத் திருத்தம் கொண்டுவந்த போது திமுக எம்.பி.க்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

  • டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதலமைச்சராக தொடர மாட்டேன் என சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்.

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம். அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கக் கூடாது என்பது மன்னர் பரம்பரைக்கான மனநிலை என ஆதவ் அர்ஜூனா மீண்டும் விமர்சனம். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்றும் எக்ஸ் வலைப் பக்கத்தில் பதிவு.

  • ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என புதிய தலைமுறைக்கு அமைச்சர்அன்பில் மகேஸ் பிரத்யேக பேட்டி.

  • தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் குவிந்திருப்பதால் பலத்த பாதுகாப்பு.

  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக, மத்திய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம். மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என அறிவிப்பு.

  • ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன். இந்நிலையில், கிணற்றின் அருகே பள்ளம் தோண்டி சிறுவனை காப்பாற்றும் முயற்சி தீவிரம்.

  • மும்பையில் மாநகர மின்சார பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற 4 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம். இந்நிலையில், பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.

  • ஹிமாச்சல் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் குவியும் சுற்றுலாப் பயணிகள். பனி படர்ந்த சாலையில் படையெடுக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்..

  • கிளர்ச்சியாளர்களிடம் அரசை முழுமையாக ஒப்படைக்க முடிவு என சிரிய பிரதமர் முகமது காஷி அல் ஜலாலி அறிவிப்பு.

  • நடப்பாண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார் அரினா சபலென்கா. வளர்ந்து வரும் வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார் அமெரிக்காவின் எம்மா நவர்ரோ.

  • விக்ரமின் வீர தீர சூரன் படத்திற்கான டீசர் வெளியீடு. ஜனவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிப்பு.