மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை. இதனால், சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். விக்கிரவாண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல்.
விழுப்புரத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள், ஆபத்தை உணராமல் இயக்கப்படும் பேருந்துகள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைச் சாலையில் 20க்கும் அதிகமான இடங்களில் மண் சரிவு. இதனால், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தமிழகத்தில் 22 இடங்களில் அதீத கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டி தீர்த்துள்ளது.
திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் வீடுகள் மீது மண் சரிவு ஏற்பட்டதில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2 ஆவது நாளாக முயற்சித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது .இந்த கனமழையால் கற்களுடன் மண் சரிந்த அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு . பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு.
விழுப்புரம் அருகே ஃபெஞ்சல் புயல் நகராமல் இருந்ததன் எதிரொலி. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 10 இடங்களில் அதி கனமழை பதிவு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில் தண்டவாளம் அருகே அபாய அளவை தாண்டி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிப்பு.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத், மதுரை தேஜஸ் விரைவு ரயில்கள் ரத்து.. சோழன், பல்லவன், வைகை உட்பட 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
விழுப்புரம் அருகே சாலையை தாண்டி வெள்ளம் சென்றதால் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள். முத்தம்பாளையம் பகுதியில் ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க சாலையை துண்டித்து வெள்ள நீர் வெளியேற்றம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையிலிருந்து 15ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம், ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்.
விழுப்புரம் வழுதரெட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சூழ்ந்த மழைநீர். மேலும், அரசின் தோழி பெண்கள் விடுதியையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறியது. இதனால், தென்கிழக்கு, அதனை ஒட்டிய அரபிக் கடலில் 3ஆம் தேதி நிலைகொள்ளும் என கணிப்பு..
ஜாமீன் வழங்கிய மறுநாளே அமைச்சரானது குறித்து செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி. சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துவோம் என நீதிபதிகள் கருத்து.
பெரியார் சிலை உடைப்பு மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறான கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதங்கள் என சிறைத் தண்டனை விதிக்கப்பட்டநிலையில், தண்டனை நிறுத்தி வைப்பு.