இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள் சில...

இன்றைய முக்கியச் செய்திகள் சில...

rajakannan

 கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக்கொண்ட நிலையில் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்தது இரவில் இருந்து அவையிலேயே தங்கி எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு, மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு கர்நாடக சபாநாயகர், முதலமைச்சர், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பாற்ற ஜனதா தளம் கட்சியின் கொறடாக்கள் முடிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் கூட்டத் தொடரை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, ‌‌‌‌இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனப் பல்வேறு சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவரை தரிசிக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்திவரதரை வணங்கிய பின்னர் அனைவரும் நேரடியாக மேற்கு கோபுரம் வழியாக வளாகத்திலிருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.