இந்தியா

#TopNews தாஜ்மஹாலை ரசித்த ட்ரம்ப் தம்பதி முதல் டெல்லியில் நடந்த வன்முறை வரை..!

#TopNews தாஜ்மஹாலை ரசித்த ட்ரம்ப் தம்பதி முதல் டெல்லியில் நடந்த வன்முறை வரை..!

Rasus

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை அணிவகுப்பு மரியாதை. 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுக்கு பின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.

அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை காக்க இருநாடுகளும் உறுதி. அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேச்சு

தாஜ்மஹாலின் அழகைக் கண்டுகளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். காதல் மனைவியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து பூரிப்பு.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அதிபர் ட்ரம்ப் சிறப்பாக செயல்படுகிறார். அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

அதிபர் டொனால்டு ட்ரம்ப், டெல்லி வந்துள்ள நிலையில் கலவரம் வெடித்ததன் எதிரொலி. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு - பள்ளிகளை இன்று மூட அரசு உத்தரவு.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல். வன்முறை, கல்வீச்சில் தலைமைக் காவலர் உள்பட 4 பேர் உயிரிழப்பு - 50 பேர் காயம்.

தூத்துக்குடி போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் எனப் பேசிய விவகாரம். விசாரணை ஆணையத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு பதில் வழக்கறிஞர்கள் ஆஜராவார் எனத் தகவல்.

வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க விதிக்கப்பட்ட தடை. அரசிதழில் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.