இந்தியா

#TopNews: சென்னையில் தொடரும் போராட்டம்; பதவியேற்கும் கெஜ்ரிவால்; இன்னும் சில முக்கியச் செய்திகள்..!

#TopNews: சென்னையில் தொடரும் போராட்டம்; பதவியேற்கும் கெஜ்ரிவால்; இன்னும் சில முக்கியச் செய்திகள்..!

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3-ஆவது நாளாக தொடரும் போராட்டம். பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்பினர் அறிவிப்பு

மூன்றாவது முறை டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். விழாவில் ஆசிரியர்களை கட்டாயம் பங்கேற்கச் செய்யும் சுற்றறிக்கையை திரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசத் தயார். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருவோர் அறிவிப்பு

4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. 3 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பதாக அறிக்கை

எல்லை தாண்டியதாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் கைது. விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை

தூத்துக்குடி வந்த கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு. சீனாவின் பல துறைமுகங்களுக்கு சென்றுவந்த கப்பல் என்பதால் அச்சம்

ஏமனில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள். சவுதி அரேபியா தலைமையிலான படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 31 பேர் பலி.