இந்தியா

குடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews

குடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews

webteam

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலமிடப்படுவது ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவையில்  குடியுரிமை திருத்த சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. மக்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

ரீசாட் 2 பிஆர்-1 செயற்கைக்கோளுடன் பி‌.எஸ்.எல்.வி. 48 ராக்கெட் ஸ்ரீகரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாய்கிறது.

திருவண்ணாமலையில் மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

வெங்காய பதுக்கலை தடுக்க பல இடங்களில் குடிமைப் பொருள்‌ வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை.

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் பேட்டி.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.