உன்னாவில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களின் வெறிச்செயலால் பரிதாபமாக பெண் உயிரிழந்துள்ளார்.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்கவும் பிரேதப்பரிசோதனை வீடியோவை தாக்கல் செய்யவும் தெலங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக என்கவுன்ட்டர் குறித்து சைபராபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கையை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் 20 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நித்யானந்தா தற்போது தங்கள் நாட்டில் இல்லை என ஈக்வடார் அரசு விளக்கம் அளித்துள்ளது. நித்யானந்தாவின் புதிய பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.