Rain Alert Facebook
இந்தியா

Headlines: தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல் வெளுத்து வாங்கிய மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல் வெளுத்து வாங்கிய கனமழை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 9 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தகவல். நாளை காலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு.

  • சென்னையில் பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் இரவில் தொடங்கியது மழை. நுங்கம்பாக்கம், தி.நகர், அம்பத்தூர், கொளத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைப்பொழிவு.

  • தமிழ்நாட்டில் 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களைச் சூழ்ந்த மழை நீர், உரிய இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உறுதி.

  • கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. புதுச்சேரியில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமசிவாயம்.

பள்ளிகளுக்கு விடுமுறை
  • கடலூரில் கப்பல் இறங்குதளத்தில் சிக்கிய 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு.

  • ஹெலிகாப்டர் மூலம் கரை திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சி எச்சரிக்கையை மீறி இனி கடலுக்குள் செல்லமாட்டோம் என உறுதி.

  • இன்று நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு.

  • புதிய பாம்பன் ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளது என பாலத்தின் வடிவமைப்புக்கு ஐஐடி நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம்

  • அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு. விரைந்து தீர்வு கிடைப்பதில்லை என புகார்கள் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு
  • சொத்து வரி உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசே காரணம் என அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு. இந்நிலையில், அப்போது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மவுனம் காத்துவிட்டு தற்போது திமுக அரசு மீது பழிபோடுவதாகவும் குற்றச்சாட்டு

  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை. மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய தொழிலாளர்கள். இணையத்தில் பகிரப்படும் காட்சிகள்.

  • கோயில்கள், மடங்களில் உள்ள யானைகளை பாதுகாப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு 39 அம்சங்கள் கொண்ட அறிவுரைகள். திருச்செந்தூர் யானை இருவரை கொன்ற நிலையில் தமிழக அரசு நடவடிக்கை

  • மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஏலத்தை ரத்து செய்யக் கோரி நடந்த கண்டன கூட்டத்தில் 48 கிராமங்களை் சேர்ந்த மக்கள் பங்கேற்பு

  • மழைக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது மின்சாரத்துறை. மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.

  • மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே, ஃபத்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் ஆலோசனை. அமைச்சரவை இடங்கள் பகிர்வு குறித்து இறுதி செய்யப்பட்டதாகவும் 2ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்கும் என்றும் அஜித் பவார் தகவல்

  • உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான போலந்தைச் சேர்ந்த ஈகா ஸ்வியாடெக் போட்டிகளில் விளையாட ஒரு மாதம் தடை. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டு விளையாடியது தெரியவந்ததால் பெண்கள் டென்னிஸ் சங்கம் நடவடிக்கை.